Saturday 31 August 2013

மூலிகைக் குடிநீர் ..!



மூலிகைகள் கலந்த குடிநீர் மூலிகைக் குடிநீர் எனப்படுகிறது. சீரகத்துடன், ஆவாரம்பூ (Cassia auriculata), ஆடாதோடை (Justicia adhatoda) இலைகள், துளசி இலைகள், வல்லாரை இலைகள், கரிஞ்ஞாலி (Acacia catechu) வேர், அருகம்புல் சாறு மாம்பட்டை, நெல்லிக்காய்ப் பட்டை ஆகிய மூலிகைகளை சம அளவில் கலந்து பொடியாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. அதிலிருந்து தயாரிக்கப்படுவதே மூலிகைக் குடிநிர்.

 வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும். அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர் போன்றவை அடங்கும்.
நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.


அருகம்புல் சாறு 

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

3.வயிற்றுப் புண் குணமாகும்.

4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.


5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.


ஆவாரம்பூ குடிநீர்
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்
“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும். 

அருகம்புல்


அருகம்புல் 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
3.வயிற்றுப் புண் குணமாகும்.
4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
6.சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
7.நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
8.மலச்சிக்கல் நீங்கும்.
9.புற்று நோய்க்கு நல்ல மருந்து.
10.உடல் இளைக்க உதவும்
11.இரவில் நல்ல தூக்கம் வரும்.
12.பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
13.மூட்டு வலி நீங்கும்.
14.கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
15.நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து.

உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும்,

உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம்.

ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்.

 அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

Monday 26 August 2013

வயிற்றுப்புண், குடல்புண் நீங்க
 மூலிகையில் சிகிச்சை

தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண், குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. "இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது" என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நம் உடல் நிலையும் மன நிலையும் சீராக அமைய வேண்டுமென்றால் உணவு மிக மிக அவசியம். இந்த உணவு நன்றாக செரித்து கழிவுபொருள் நீங்கி மீதமுள்ள சத்துப் பொருட்கள் தான் நம் ரத்தத்தில் கலந்து உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் சென்றடைகிறது. வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளாரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் உணவு செரித்தலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

அல்சர் ஏற்படக் காரணங்கள் மற்றும் வராமல் தடுப்பது, வந்தால் மூலிகை மருத்துவத்தில் எப்படி சிகிச்சை பெறலாம் என்பது பற்றி மூலிகை மருத்துவர் எம்.சபாபதி இதோ ஆலோசனைகளை கூறுகிறார்.

வயிற்றுப் புண், குடல் புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.

அல்சர் ஏற்பட காரணங்கள்

உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும். அதாவது வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் என்றும் கூறலாம். இது நமது உணவு மண்டல உறுப்புகளின் மீது அமைந்திருக்கும் மியூக்கஸ் மெம்ப்ரேன் என்ற மென்மையான சவ்வை அழித்து விடுகிறது.

இதற்கான காரணங்கள்

1. மன அழுத்தம் (எந்த வகையில் ஏற்பட்டாலும் சரி).

2 தவறான உணவு பழக்கவழக்கங்கள் (தாமதமாக சாப்பிடுதல், செய்கை குளிர்பானம், துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு)

3. மதுவகைகள், புகைப்பிடித்தல், வெற்றிலைபாக்கு, புகையிலை

4. ஆங்கில மருந்துகளை அடிக்கடி சாப்பிடுவது

5. ஐஸ்கிரீம், சாக்லேட், அதிகமாக பால் மற்றும் தயிர், மோர் சாப்பிடுவது.

6. புளிப்பு தன்மையுள்ள பழங்களை அதிகளவில் சாப்பிடுவது(திராட்சை, கமலா, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலும்பிச்சை, பப்பாளி, ஊறுகாய், அன்னாசி)

இவைகளை தவிர்த்தாலே போதும் அல்சர் நம்மை நெருங்காது. உடம்பில் ரத்தத்தில் ஹைட்ரஜன் அயணிகளின் அளவு 7க்கும் கீழே குறைந்தால் உடம்பு புளிப்பு தன்மையடையும். அதிகபடியான புளிப்பு மலம், சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இரைப்பையிலும் நிறைய சேர்ந்து விடும். புளிப்புத்தன்மை இரைப்பையில் அதிகமானால் அதன் உட்சுவரில் அரிப்பு ஏற்பட்டு புண் உண்டாகி விடும். நாளாக நாளாக வயிறு எரிச்சல், குடல் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அல்சர் ஏற்பட்டதற்கான அறிகுறிகள்

இரைப்பை பகுதியில் வலி, சாப்பிடும் முன்போ, பின்போ அல்லது சாப்பிடும் போதோ வலி ஏற்படுவது, புளிச்ச ஏப்பம், நெஞ்சுக்குள் வலி ஆகியவற்றை கூறலாம்.

அல்சருக்கான மூலிகை சிகிச்சை

மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை வைத்தே அல்சரை எளிதில் குணப்படுத்தலாம். ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது.

அல்சரை குணப்படுத்த வேப்பிலை, குப்பை மேனி, வெந்தியம், அருகம்புல், கடுக்காய், அத்தியிலை, நெல்லி, கற்றாழை, கோஸ், மிளகு, சுக்கு, புதினா, கொத்தமல்லி, நன்னாரி மற்றும் மணத்தக்காளி, சுண்டைக்காய், பெருங்காயம், மஞ்சள், வசம்பு, சீரகம், வாழைத் தண்டு, மாதுளை, அகத்திக்கீரை முதலியவைகள் பயன்படுகின்றன.

இவைகளை சேகரித்து கேப்சூலாகவோ, பவுடராகவோ தயாரித்து சாப்பிடலாம். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன் அளவு இந்த பவுடரை எடுத்து தண்ணீரில் கலந்து இரண்டு முறை சாப்பிட்டாலே போதும். எவ்வளவு நாள்பட்ட குடல் புண்ணாக இருந்தாலும் 4 மாதங்களில் பறந்து விடும்.

இதற்கென உள்ள முறைகளையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். எந்த மருத்துவ முறையை பின்பற்றுகிறோமோ அதே முறைகள் உள்ள மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று சிகிச்சையை தொடர்ந்தால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகி விடும். மூலிகை மருத்துவம் குறித்த விபரங்களை சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தெய்வீக மூலிகை மருத்துவ ஆலோசனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வயிற்றுப் புண், குடல் புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.

அல்சர்' - சில உண்மைகள்
வயிற்றிலே ஒன்றும் இல்லை என்ற மாயத் தோற்றமும் பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்ச்சியும் தோன்றுகிறதா?  மார்புப்ப பகுதியில் எரிவது போன்ற உணர்வு  உள்ளதா?  வயிற்றிலேருந்து புளிப்புச் சுவையான நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா?  இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்குகுடல் புண் இருக்கலாம்.
குடல் புண் என்றால் என்ன
?
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயத்தை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன.  இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு.  இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.
புண் எதனால் ஏற்படுகிறது? 
குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.  சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்
ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது. செரிமான தொகுதியில் எங்கு புண் ஏற்படுள்ளது என்பதைப் பொருத்து குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .  2)சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.  இரண்டு வகைகள் இருப்பினும் இரண்டுக்கும் உரிய நோய்க் குறிகள் பெரும்பாலும் ஒரே மாதரியானவை.
குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?
காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.
இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன.  இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.  சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது.  அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும்.  சட்டத்துக்கு உட்பட்டதுபோல் இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை.  இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.
சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு.  குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை.   வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும்.  இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை.  ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.  இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.  ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார்.  என்பதைப் பொறுத்து  இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.  சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு.  பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.
சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம்.  அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம்.  அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.  ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.
குடல் புண்ணுக்க மருத்துவம் செய்யாவிட்டால்...
 குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும்.  ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும்.  அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.
ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது.  அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது.  இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.
சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம்.  இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.
வயிற்றுத் தடையையும் அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும்.  ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும்.  எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவர் குடல்புண் இருப்பதைக் கண்டறிந்தால், சில மருந்துகளை சிபரிசு செய்வார்.  அப்போது எதைச் செய்ய வேண்டும்.  எதைச் செய்யக் கூடாது என்பதையும் கூறுவார்.  அவைகள் பின்வருமாறு.
செய்யக்கூடாதவை
1. புகைபிடிக்கக் கூடாது.
2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது.  பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
4. சாப்பிட  வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.
5. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது.  அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும்.  இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
6. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
7. மனநிலையை தடுமாற விடக் கூடாது.
8. அவசரப்படக் கூடாது.
9. கவலைப்படக் கூடாது.
10. மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
செய்ய வேண்டியவை
1. குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
2. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.  அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.  தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
3. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
4. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இருக்கமாக உடை அணியக் கூடாது.
5. மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்திதிக் கொள்ளலாம்.
6. யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.
7. எப்போதும் சந்தோஷமான பேச்சுக்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடவேண்டும்.
8. அலுவலக வேலைகளை அலுவலகத் தோடேயே விட்டுவிட வேண்டும்.
9. முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.
10. சுகாதார முறைகளைப் பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?
அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள்.  தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.  எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும்.  அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.  தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.  இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், ·பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது.  எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.
குடல் புண் உள்ளவர்களுக்கு உ¡¢ய ஆகாரம் என்ன? 
மென்மையான உணவு தேவை என்பது பற்றி சந்தேகம் எழுந்துள்ளது.  பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை.  அனேக நோயாளிகள் இப்படிப்பட்ட உணவு வகைகளை எவ்விதப் பிரச்சினையும் இன்று ஏற்றுக் கொள்கிறார்கள்.  இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.
1. சத்தான சரிவிகித உணவு.
2. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
3. காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.  டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல.  இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது.  தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
4. வயிற்றில் கோளாறை உண்டுபண்ணும் உணவு எனத் தெரிந்தால் அவற்றை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டும்.  இவ்வுணவானது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமானதாக இருக்கும்.  ஆகவே அவரவர் அனுபவத்தால் தீமை  செய்பவை எவை எனத் தெரிந்து ஒதுக்கிவிட வேண்டும்.
5. சாப்பிடும் உணவின் சூடு கூட முக்கியமானதாகும்.  மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது.  குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன மிகவும் நன்மை பயக்கும்.
6. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.  ஆகவே அதிக அளவில் இவைகளைச் சாப்பிடலாம்.
7. பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.  வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.  பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.