Monday 25 March 2013

தூக்கம் வர இயற்கை மருத்துவம் 

தூக்கம் வரவில்லையே என புலம்புகிறவர்கள் ஒருபுறம் இருக்க, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நீண்ட நேரம் தூங்குவதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் வருவதுடன் நம் வாழ்நாளில் 17 சதவீதம் குறையும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்கினாலே போதும். 

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

ஹிஸ்டீரியா நோய் தாக்கப்பட்ட பெண்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இவர்கள் மருதாணிப்பூவை தலையில் சூடி வந்தால் நோய் குறையும், தூக்கம் வரும்.

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும். 


வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

.காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். 



நன்றாக தூக்கம் வர தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்பு, இரவு உணவு சாப்பிடுங்கள். டின்னருக்கு முன் பழம் அல்லது பால் குடிக்கலாம். தினமும் உடற்பயிற்சி அவசியம். இதனால் நன்றாக தூக்கம் வருவதுடன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து, சில நிமிடங்களுக்கு பின் குளிப்பதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்.
படுக்கைக்கு செல்லும் முன் மேலோட்டமாக புத்தகம் படித்தால், மெல்லிசை பாடல்கேட்பதன் மூலம் ஆழ்ந்து தூங்க முடியும். காலையில் 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
நிம்மதியான தூக்கம் வர இடது கை கீழே இருக்கும்படி ஒருக்களித்து படுத்து உறங்க வேண்டும். ஏனென்றால்  இடது பக்கமாகப் படுத்திருக்கும்பொழுது உடல் அந்த பாகத்தை அழுத்துகிறது. இதனால் சுவாசம் வலதுநாசி வழியாகத்தான் வரும். இடதுநாசி வழியாக வராது. வலதுநாசி வழியே மூச்சு வந்தால், மனநிலை அமைதியாக- நல்ல நினைவுகள் உள்ளதாக இருக்கும் என்று நாடி சாஸ்திரம் சொல்லுகிறது. படுக்கும்போது இடதுபக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவதற்கு இதுவே காரணம்.

எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற
காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.


கசகசாவை பால் விட்டு மைய அரைத்து, அந்த விழுதை சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க, சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் வரும்.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.




பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களும், பேய் பூதம் என மன நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் மருதோன்றியின் விதையை நெருப்பிலிட்டு புகைக்க மேல் கண்ட பாதிப்புகள் மாறும் என்கிறார் அகத்தியர்.


தூக்கம் வர வெந்தயகீரை சாற்றுடன் (2 டீஸ்பூன்) ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தூங்கப்போகும் போது குடிக்கவும்.

1 comment:

Unknown said...

nandri. I am taking sleeping pills for more than 10 years and I want to stop it. Your article was very useful. I will try all methods and choose the best one.