Wednesday 27 February 2013

கல்லீரல் பாதிப்பை போக்க





கல்லீரல் பாதிப்பை போக்க 


கல்லீரல் பேசுகிறது
நமது நாட்டைப் பொறுத்தவரை கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு இரண்டு காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒன்று, குடிப் பழக்கம். இரண்டாவதாக, கொழுப்பு நிறைந்த உணவுகள்.
அளவிற்கு அதிகமாக குடிப்பதனால் (மருத்துவரை கலந்தாலோசித்து மது அளவை நிர்ணயித்துக் கொள்ளவும்) கல்லீரலிற்கு ஏற்படும் பாதிப்பே சாதாரண மஞ்சள் காமாலை நோயிலிருந்து ஹெப்பாடிடிஸ் பி ஆகியனவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இவற்றை ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்கள் என்று மருத்துவம் கூறுகிறது.
மற்றொரு வகையான பாதிப்பு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் உண்டாகிறது. இதனை ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு வியாதிகள் (Non-alcoholics fatty liver disease – NAFLD) என்று மருத்துவம் வகைப்படுத்துகிறது.
இந்த இரண்டாவது வகை – அதாவது கொழுப்பு சேகரிப்பால் கல்லீரல் கெடுவது – ஒருவருக்கு 35 வயதில் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவர் 55 வயதை அடையும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, அதனை மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரல் வீங்கி சிகிச்சையால் குண்பபடுத்த முடியாத நிலையைத்தான் லிவர் சிர்ரோசிஸ் என்றழைக்கின்றனர்.


அளவான குடிப்பழக்கம், முறையான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி ஆகியன கல்லீரலை பாதுகாக்கும் மிகச் சாதாரண வழிகளாகும். பாதிக்கப்பட்டாலும் மருத்துவத்தின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பு கல்லீரல் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். எனவே, அதிகமாகக் குடித்தல், கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல் ஆகியவற்றை தவிர்த்தால் போதும். நல்ல கல்லீரலுடன் வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழலாம்.

எலுமிச்சை: காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது.
பீட்ரூட், காரட்:  நச்சுப் பொருட்களை வெளியேற்ற இவை உதவுகின்றன.
இந்த உணவுப் பொருட்கள் பொதுவான ஆரோக்கியத்திற்கும் உதவும்.
 கல்லீரல் நோய்களை குணமாக்கும் கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் 
ஆற்றலும் இதனிடம் அமைந்திருக்கிறது. அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தி சிறிது எரிந்த பின்னர் நெருப்பை ஊதி அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு, வாய் வழியாக உள்ளுக்கு இழுத்தால் கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமாகிவிடும். வாந்தி ஏற்படும் பொழுது இவ்வாறு புகை பிடித்தால் வாந்தி நின்றுவிடும். சுவாச கோசத்தில் ஏற்படக் கூடிய அழற்சியும் சமன்படும். உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது அகில் புகைபடுமாறு செய்தால் காயம் வெகு விரைவில் குணமாகிவிடும். அகில் கட்டை தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் உட்புறத்தில் ஏற்படக் கூடிய பல நோய்களை அகற்றும். தலைவலியையும் குணமாக்கும்.
கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித் தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து ௭டுக்கவும்.

ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை போத்தலில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை–6, மதியம்–12, மாலை–6 மணிக்கு) நெல்லிக் காயளவு ௭டுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.

கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி.

துளசி இலைகள் 10–20 ௭டுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்–4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவை யானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு ௭திர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்துமா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப் பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.

முற்றிய நிலையில் இரத்த வாந்தி ௭டுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டி ஏற்படும். ௭லுமிச்சம்பழ மும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை–மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும்.

இருதயமும் பலம் பெறும். சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது. ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் ௭லுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குண மாகும்.

கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் ௭ல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும்.

கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமுடன் செயல்படும்.

குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக கோப்பி பழக்கமுள்ளவர் களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் துளசி தடுக்கும்.
கல்லீரல் நோய்:

மனிதனுடைய உடல் அமைப்புகளில் அற்புதமான செயலை செய்வது ஈரல்.சுரப்பிகளிலேயே மிகவும் நுணுக்கமானது மற்றும் அளவிலும் பெரியது.இந்த ஈரலானது இருதயம்,சிறுநீரகம்,இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் உணவுகளைச் செரிக்கச் செய்வது போன்ற எண்ணற்ற வேலைகளை இடையறாது செய்துக் கொண்டே இருக்கிறது.இந்த செயல் திறனைக் குறைக்கும்படி பலவித நோய்களாலும்,கிருமித் தொற்றுகளினாலும் ஈரல் வீக்கம் அல்லது ஈரல் சுருங்கிப் போதல்,காமாலை போன்ற கல்லீரல் நோய்கள் உண்டாகின்றது.
அறிகுறிகள்:
வாயில் கசப்புச் சுவை,ருசியின்மை,வாயில் நீர் ஊறல்,பசியில்லாமை,உண்ட உணவு செரியாமை,காலையில் பித்தவாந்தி,முகத்தில் தேஜஸ் குறைதல்,முகம் வற்றி, எலும்புகள் தெரிதல்,வயிறு பெருத்து,கை கால் மெலிந்து போதல்,காய்ச்சல் இருத்தல் போன்ற குறிகள் தென்படும்.
1.வாய்வு கல்லீரல் நோய்:
வாய்வானது சீர்கோடடைந்து,வாய்வு தோஷம் உபரியாகி,உஷ்ணம்,காய்ச்சல் உண்டாகி சிறுகச் சிறுக உடம்பு இளைத்தல்,வயிறு பெருத்து,ரசத்தாது கேடு அடைந்து,நாளங்களின் முடிச்சுகளில் கட்டி போன்ற முடிச்சுகள் ஏற்படும்.
2.பித்தக் கல்லீரல் நோய்:
இரத்தத்தை கெடுத்து,பித்தத்தின் தன்மை அதிகரிக்கச் செய்து உடல் முழுவதும் பித்தநீர் பரவச் செய்து காண்பதற்கு மஞ்சளாகத் தோற்றம் அளிக்கும்.வாயில் கசப்பு ஏற்பட்டு பித்த வாந்தி எடுத்தல்,முகம் வெளிறிக் காணும்.
3.கபத்தினால் உண்டாகும் ஈரல் நோய்:
இந்நோய் சரீரத்திற்கு வன்மையும்,தெம்பும் கொடுக்கக் கூடிய உஷ்ணத்தை கேடடையச் செய்து,அத்துடன் குளிர்ச்சியான கபம் கலந்து,கல்லீரலையும் கெடுத்து விடுகிறது.உடல் வீங்கி வெளுத்து வயிற்றைப் பெருக்கச் செய்யும்.
மருந்து 1: திரிபலா கஷாயம்
தன்றிக்காய்

தேவையானப் பொருள்கள் :
  1. கடுக்காய்த் தோல்=100 கிராம்.
  2. நெல்லி வற்றல்=100 கிராம்.
  3. தன்றிக்காய் தோல்=100 கிராம்.
செய்முறை:
எல்லாவற்றையும் சுத்தப் படுத்தி,வெயிலில் காய வைத்து,இடித்து,பொடித்து நுண்ணிய சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 200 மி.லி நீரில் கலந்து அசையாமல் இரவு முழுக்க வைத்திருந்து மருந்துகளை வடிக்கட்டிச் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கவும்.காலையிலும் இதே போல் ஊறவைத்து மாலையில் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
காமாலை,ஈரல் வீக்கம் போன்ற நோய்கள் குறையும்.
************************
மருந்து 2:
அன்னாசிப் பழத்தில் இருந்து பிழிந்த சாறை ஒரு நாளைக்கு இரண்டு,மூன்று தடவை 100 மி.லி வீதம் குடித்து வந்தால் ஈரல் நோயின் வீரியம் குறையும்.
************************
மருந்து 3:
முள்ளங்கியை இடித்துப் பிழிந்து சாறை வேளைக்கு 25 மி.லி ஆக ஒரு நாளைக்கு 2 வேளை குடிப்பதால் வலப்பாட்டு மற்றும் இடப்பாட்டு ஈரல் வீக்கம்,ஈரல் கட்டி முதலியவை குறையும்.
************************
ருந்து 4:வேப்பம் பட்டை கஷாயம்
செய்முறை:
100 வருடம் சென்ற பழைய வேப்ப மரத்தின் பட்டைகளைக் கொண்டு வந்து மேல் இருக்கும் வறண்ட பகுதியை நீக்கிவிட்டு உட்பகுதியைப் பஞ்சு போல் இடித்து தண்ணீர் சேர்த்து சிறு தீயாக எரித்து நன்கு வற்ற வைத்து மருந்தைக் கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
ஒரு வேளைக்கு 50 மி.லி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை  சாப்பிட்டு வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
கல்லீரல்,மண்ணீரல் வீக்கம் மற்றும் சுரத்தில் வந்த வீக்கம் குறையும்.
************************
மருந்து 5: கருந்துளசி கஷாயம்
தேவையானப் பொருள்கள்:
  1. கருந்துளசி வேர்=20 கிராம்.
  2. மிளகு கிராம்=10 கிராம்.
  3. சித்தரத்தை=10 கிராம்.
  4. சதகுப்பை=40 கிராம்.
செய்முறை:
எல்லாவற்றையும் பெரும் தூளாக இடித்து வைத்து,ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுச் சிறு தீயாக எரித்து,அடுப்பில் வைத்து, 120 மி.லி ஆகச் சுண்ட வைத்து,மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
காலை,மாலை ஆகிய இரண்டு வேளைக் குடிக்கவும்.
தீரும் நோய்கள் :
கல்லீரல்,மண்ணீரல் நோய்,காய்ச்சல் கட்டி போன்றவை குறையும்.

2 comments:

Nisha said...

பயனுள்ள தகவல். ஈரலில் கொழுப்பு படிவடைவதை குறைக்க எளிய வழிமுறை

questaaberman said...

Lucky Club Casino Site ᐈ Find a Lucky Club Casino Review
Lucky Club casino offers the luckyclub.live latest gambling products and services. We've set the highest standards and we have a clear aim to help you find the perfect