Saturday 9 February 2013

கீழாநெல்லி




கீழாநெல்லி

ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும்
இலைக்கொத்தின் மேற்புரத்தில் மேல் நோக்கிய காய்களை உடைய மேலாநெல்லியும் உண்டு. ஆகவே கீழா நெல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்.
இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.
தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.ஈரமான இடங்கள், வயல்வெளிகள் போன்ற இடங்களில் கீழாநெல்லியை காண முடியும். 

தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை  கீழாநெல்லியாகத்தான் இருக்கும் .மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி  என்று பலரும் இலவச வைத்திய முறை மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டதும் கூறுவார்கள் . ஆனால் அணுபான  முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது .கீழாநெல்லி  மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில்  பயன்படுகின்றது.

உண்ணும் அளவு:- சாறு 10-20 மி.லி. ஒரு நேரத்துக்கு பயன்படுத்தலாம். தூள் :- 3-6 கிராம்.

பயன் தரும் பாகங்கள் -: செடி முழுதும், தண்டு, 
வேர், மற்றும் இலைகள்.

பயன்கள் -: மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.
கீழாநெல்லியின் முழு தாவரத்தையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதை நன்கு மை போல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழம் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை, 1/2 லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்துவர வேண்டும். இந்த காலத்தில் உணவுக் கட்டுப்பாடு அவசியம். இவ்வாறு செய்து வந்தால் மஞ்சள்காமாலை, நீரிழிவை குணப்படுத்தலாம். அல்லது கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.
வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.
.கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.
உடல்சூடு:-
கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.

ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்து காலை வேளையில் குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.

நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துகலக்கிக் காச்சி வடித்து தலை முழுகி வரலாம்இது கீழாநெல்லி தைலமாகும்.

கீழா நெல்லி சமூலம் 4 அல்லது 5 செடி,விஷ்ணுகிரந்தி ஒரு கைப்பிடி, கரிசாலை ஒரு கைப்பிடி,சீரகம், ஏலக்காய், பறங்கிச்சக்கை வகைக்கு 5 கிராம், ஆங்கூர் திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு நாலில் ஒன்றாகக் சுறுக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 60 முதல் 90 மில்லி தினம் இரு வேளை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குணமாகும்.

நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.

இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக்குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும்.

கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

கீழாநெல்லி இலை, கரிசிலாங்கண்ணி இலை தும்பையிலை சமன் அரைத்து பெரியோருக்கு புன்னைக் காயளவு, இளைஞ்யர்களுக்குக் கழற்சிக்காயளவு, சிறுவர்களுக்குச் சுண்டைக்காயளவு பாலில் பத்து நாள் கொடுத்துக் காரம் புளி நீக்கி, பால் மோர் சோறும் அரை உப்புமாகச் சாப்பிட காமாலை தீரும்.

கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப் பீனிசம், ஓயாத்தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும்.

ஓரிதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.

கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும்.
கிழா நெல்லியை வாரம் ஒரு முறையாவது உபயோகித்து வர கல்லிரல் வலுவாக இருக்கும் .கல்லிரளுக்கு ,அதிக வேலைகளை உள்ளன . இதயமும், கல்லிரலும்  ஒன்றுதான் இருக்கிறது எனவே அவைகளை கவனமுடன் வருமுன் காப்பது மிக அவசியம் .


6 comments:

Dr.S.Soundarapandian said...

கீழாநெல்லியின் குணங்கள் நன்றாக விவரிக்கப்பட்டுள்ளன !

Kadayanallur said...

where is available in the tamil nadu and my place in cuttralam

Kadayanallur said...

please replay me

Unknown said...

இலையின் கீழ் இருக்கும் காயுடன் சாப்பிடுவதா...இல்லை காயை நீக்கி இலையை மட்டும் சாப்பிடுவதா.. Please reply

SriYogaalaya Panner Selvan said...

காயுடன் சாப்பிடலாம்

SriYogaalaya Panner Selvan said...

குற்றாலம் முழுவதும் கிடைக்குமே...
எல்லா இடங்களிலும் பரவலாக எப்போதும் இருக்கும்