Wednesday 30 January 2013

வில்வம்




வில்வம் 




வில்வ வேரை நன்றாகப் பொடிசெய்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, பசும்பாலுடன் சேர்த்து தினசரி காலையில் குடித்துவந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

வில்வ மரத்தின் இலைகளுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் இருக்கிறது. நாட்பட்ட இருமல், சளி, நெஞ்சில் கபம் சேருதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளானவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்னர் ஏழெட்டு வில்வ இலைகளை நன்கு மென்று விழுங்கினால், நல்ல குணம் தெரியும். உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனைச் சுமந்து செல்லும் சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வில்வத்துக்கு உண்டு. செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்றவையும் வில்வ இலைகளுக்கு கட்டுப்படும்.

வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும் பாண்டு வியாதி பறந்தோடும்.

வில்வதளத்தினை நன்றாக சுத்தம் செய்து அதை செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் ஒன்பது இலை வரையில் ஒருமணிநேரம் ஊறவிட்டு காலையில் வெறுவயிற்றில் இலைகளை சப்பி விழுங்கி விட்டு அந்த நீரை அருந்திவர வெப்பத்தினால் விளையும் மேல் செப்பிய நோய்கள் அறும். இரவில் போட்டு காலையிலும் அருந்தலாம். 



No comments: